ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

0 1675
ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளுடன் வருகிற 13-ஆம் தேதி பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய குழுவினரின் வசதிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த தாக குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கான பொருட்கள், தடுப்பூசி போடப்பட்டதன் நிலவரம் குறித்து ஆலோசித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

130 கோடி இந்தியர்கள் சார்பில், ஒலிம்பிக் செல்லும் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க அவர்களிடம் தாம் வருகிற 13ம் தேதி கலந்துரையாட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments