தெருவில் நாய் போல சுற்றித்திரியும்... அந்த 3 சிறுத்தைகள்..! பீதியில் மக்கள்

0 7563
தெருவில் நாய் போல சுற்றித்திரியும்... அந்த 3 சிறுத்தைகள்..! பீதியில் மக்கள்

வால்பாறையில் தெருநாய்களைப் போல சிறுத்தைகள் சர்வசாதாரணமாக குடியிருப்புப் பகுதிக்குள் சுற்றித்திரிவதால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். நள்ளிரவில் நாய் வேட்டையாடும் 3 சிறுத்தைகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

இரவு நேரங்களில் தெரு நாய்கள் கூட்டமாக சுற்றுவதை ஆங்காங்கே பார்த்திருப்போம், தற்போது அதே மாதிரி 3 சிறுத்தைகள் ஒரு தெருவில் சுற்றித்திரிந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள காமராஜர் நகர், சிறுவர் பூங்கா,வாழைத்தோட்டம், எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பல்வேறு மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் சிறுத்தை புகுந்து அப்பகுதியில் உள்ள வளர்ப்பு பிராணிகளை பிடித்து செல்வது வாடிக்கை என்று கூறப்படுகின்றது.

அந்தவகையில் குமரன் நகர் ஆரம்ப சுகாதார நிலைய தெருவில் சம்பவத்தன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் மூன்று சிறுத்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக உலாவந்தது அப்பகுதியிலுள்ள டிப்பார்ட்மென்ட் ஸ்டோரில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

அதே பகுதியில் உள்ள டாக்டர் மஜீன்தார் என்பவர் வீட்டில் வளர்த்து வந்த, நான்கு குட்டிகளை ஈன்ற தாய் நாயை சிறுத்தை கவ்விச் சென்றதாகவும், வழக்கமாக தனியாக ஊருக்குள் வரும் சிறுத்தை, தற்போது குழுவாக நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து நாய்களை வேட்டையாட தொடங்கி இருப்பதாக சொல்லப்படுகின்றது.

இந்த காட்சிகளை கண்ட அப்பகுதி மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். சிறுத்தை சிங்கிளா வந்தாலே அடங்க மறுத்து சீறும், ஊருக்குள் கூட்டமாக வருவதை வழக்கமாக்கினால் அப்பகுதியில் மக்கள் மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்கு கூட இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர இயலாத நிலை ஏற்படும் என்று அஞ்சுகின்றனர்.

இனிமேலும் காலம் தாழ்த்தாமல் சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி நடமாடிவரும் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த காட்டுக்குள் சென்று விடுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments