உலகின் மிகப்பெரிய லாலிபாப் - கேரள இளைஞர்கள் அசத்தல்

0 2462
உலகின் மிகப்பெரிய லாலிபாப் - கேரள இளைஞர்கள் அசத்தல்

25 கிலோ எடையும், பல அடி உயரம் கொண்ட பிரமாண்ட லாலிபாப்பை கேரளாவை சேர்ந்த இளைஞர்கள் உருவாக்கி அசத்தியுள்ளனர்.

Village Food Channel என்ற யுடியூப் சேனலை நடத்தி வரும் Firoz Chuttipara, நண்பர் ஒருவருடன் சேர்ந்து இந்த லாலிபாப்பை தயாரித்து அதனை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார்.

அதில், ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை கொதிக்க வைத்து, கலர் பொருட்கள் - எசன்ஸ் சேர்த்து, உருவாகும் பாகுவை ஒரு பானைக்குள் ஊற்றி, கெட்டியாக்கி, பின்னர் பானையை உடைத்து, மெகா லாலிபாப்பை தயாரித்து காட்டுவது பதிவாகியுள்ளது. இது உலகின் மிகப்பெரிய லாலிபாப் என அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments