துபாயில் திறக்கப்பட்டது உலகின் மிக ஆழமான நீச்சல் குளம்

0 2569
துபாயில் திறக்கப்பட்டது உலகின் மிக ஆழமான நீச்சல் குளம்

உலகிலேயே மிக ஆழமான நீச்சல் குளம் துபாயில் திறக்கப்பட்டுள்ளது. டீப் டைவ் (deep dive) எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த நீச்சல் குளத்தை துபாய் பட்டத்து இளவரசர் Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum திறந்து வைத்தார்.

196 அடி ஆழத்தில், Nad Al Sheba பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீச்சல் குளத்தில் கூட்ட அரங்கம், விளையாட்டு அரங்கம், நூலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

14 மில்லியன் லிட்டர் நீரைக் கொண்டிருக்கும் இந்த நீச்சல் குளத்தின் கொள்ளளவு ஆறு ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளங்களுக்கு சமமாகும். டைவிங் செய்ய விரும்புவோருக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கும் இந்த நீச்சல் குளம், உலகிலேயே மிக ஆழமான நீச்சல் குளம் என்ற கின்னஸ் சாதனையை பெற்றுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments