சகோதரியின் சிகிச்சைக்காக கொள்ளையனாக மாறிய இளைஞன் ; தனியாக இருந்த பெண்ணிடம் கத்தி முனையில் நகை, பணம் கொள்ளை

0 2188
சகோதரியின் சிகிச்சைக்காக கொள்ளையனாக மாறிய இளைஞன்

மதுரையில் சகோதரியின் சிகிச்சைக்கு பணம் தேவை என்று கூறி வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தி முனையில் நகை, பணத்தை பறித்துச் சென்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

வெங்கடாசலபுரம் பகுதியிலுள்ள வீட்டுக்குள் முகமூடி அணிந்து கொண்டு புகுந்த இளைஞன் ஒருவன் அங்கு தனியாக இருந்த பெண்ணிடம் தனது சகோதரி உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதற்கு10ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்படுவதாகவும் கூறி பணம் கேட்டுள்ளான்.

அந்த பெண் பணம் தர மறுத்த நிலையில் திடீரென கத்தியை காட்டி மிரட்டி பீரோவில் இருந்த 40ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 4 சவரன் தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பியுள்ளான்.

இது குறித்து புகாரின் பேரில், அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தும், கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தும் இளைஞனை தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments