சொத்துக்களை அபகரித்துக் கொண்டு வீட்டை விட்டு விரட்டியதாக 80 வயது மூதாட்டி அளித்த புகாரில் அவரது மகன் மீது வழக்குப்பதிவு

0 1828

தனது சொத்துக்களை அபகரித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக 80 வயது மூதாட்டி காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரில், அவரது மகன் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை திருவெற்றியூரை சேர்ந்த கோமளா பாய், கொடுத்த புகார் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வளசரவாக்கம் போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து பெற்றோர் மற்றும் முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மூதாட்டி கோமலாபாயின் மகன் கமலகண்ணன் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments