வங்கதேசத்தில் ஜூஸ் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து- 52பேர் பலி

0 1752
வங்கதேசத்தில் ஜூஸ் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து- 52பேர் பலி

வங்கதேசத்தில் ஜூஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 52 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். நாராயங்கஞ்சி பகுதியில் (Narayanganj)இயங்கிவரும் தொழிற்சாலையில் நேற்றிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர், 12 மணி நேரத்துக்கும் மேலாக மீட்புப்பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். தீயிலிருந்து தப்பிக்க அடுக்குமாடி கட்டத்திலிருந்து குதித்த 40க்கும் மேற்பட்டோர், படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments