ஸ்வீடனில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து ; 9 பேர் பலி

0 1964
ஸ்வீடனில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து

ஸ்வீடனில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி உட்பட அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.

தலைநகர் ஸ்டாக்ஹோமிற்கு தெற்கே ஒரேப்ரோ நகரில் விமானி உட்பட 9 பேருடன் சென்று கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று எதிர்பராத விதமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 8 ஸ்கைடைவிங் வீரர்கள் மற்றும் விமானி என 9 பேரும் உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments