விளையாட்டு வினையானது ; கிரிக்கெட் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

0 2944
கிரிக்கெட் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

கோவையில் கிரிக்கெட் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் மூண்ட முன்விரோதத்தால், இளைஞர் ஒருவரை மற்றொரு இளைஞர் கும்பல் அரிவாளால் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சூர்யா என்ற இளைஞருக்கும், செல்வா என்பவருக்கும் இடையே 3 மாதத்திற்கு முன் கிரிக்கெட் விளையாடும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சூர்யா தனது அண்ணண் கார்த்தியிடம் கூறவே, நேற்றிரவு பைக்கில் சென்று கொண்டிருந்த செல்வாவை, மதுபோதையில் இருந்த கார்த்தி தடுத்து நிறுத்தி ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அங்கிருந்து சென்ற செல்வா தனது நண்பர்களுடன் வந்து கார்த்தியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், செல்வா மற்றும் அவரது கூட்டாளிகள் 6 பேரை தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments