ஓ.டி.டியில் வெளியாகும் நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படம்

0 4914

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஓராண்டாக ரிலீசாகாமல் இருந்த நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த வாழ் திரைப்படம், ஓ.டி.டியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிவக்கார்த்திக்கேயன் தயாரிப்பில் இதுவரை கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஆகிய இரண்டு படங்கள் வெளிவந்துள்ளன. அடுத்ததாக சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள வாழ் படத்தை அருவி பட இயக்குனர் அருண்பிரபு இயக்கி உள்ளார்.

இப்படத்தை கடந்தாண்டே வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளிப்போனது. இந்நிலையில், வாழ் படம் வருகிற 16-ந் தேதி நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments