நகைக்கடை அதிபர் புகார் - விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர் சல்மான் கானுக்கு சம்மன்

0 2583

நகைக்கடை அதிபர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர் சல்மான் கானுக்குச் சண்டிகர் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

அருண் குப்தா என்பவர் அளித்த புகாரில் 2018ஆம் ஆண்டு மூன்று கோடி ரூபாய் செலவில் ஒரு நகைக்கடையைத் திறந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கடைக்கு விளம்பரம் செய்வதாக உறுதி அளித்த சல்மான் கான் பிறகு விளம்பரம் செய்யவில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து இந்தப் புகாரின் உண்மைத் தன்மை பற்றி விசாரிப்பதற்காக ஜூலை 13ஆம் நாள் நேரில் ஆஜராகும்படி சல்மான்கான், அவர் தங்கை ஆல்விரா மற்றும் 6 பேருக்குச் சண்டிகர் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments