'அவங்களை கைது பண்ணுங்க இல்லனா சஸ்பென்ட் பண்ணிடுவேன் ...' கடுப்பான கரூர் கலெக்டர்

0 6614

நடுரோட்டில் வெடி போட்டுட்டு இருக்காங்க, அவங்களை எல்லாம் கைது செய்யுங்கள் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் போலீசாரிடத்தில் உத்தரவிட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

கரூர் மாவட்டத்தை சார்ந்த அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நேற்று அறிவிக்கப்பட்டார். இதனை கொண்டாடும் விதமாக கரூர் பேருந்து நிலையம் அருகில் அந்த கட்சி சார்பில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.பேருந்து நிலையம் அருகில் திரண்ட பாஜக தொண்டர்களும், நிர்வாகிகளும் மாவட்ட தலைவர் சிவசாமிக்காக காத்திருந்தனர்.

பாஜகவினர் இரு சக்கர வாகன பேரணி செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 50- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கரூர் மாவட்ட தலைவர் சிவசாமி உள்ளிட்ட பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்பு வழங்கி கொண்டாடினர். அப்போது அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருந்தது.

இந்த சமயத்தில் அங்கு காரில் வந்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வாகனத்தின் முன்பும் பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்தனர். இதனால், கடுப்பான ஆட்சியர் பிரபு சங்கர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம், போக்குவரத்துக்கு இடையூறாக வெடி போட்டுட்டு இருக்காங்க, அவங்களை கைது செய்யலனா சஸ்பென்ட் பண்ணிடுவேன்... யார்ட்ட பெர்மிசன் வாங்கியிருக்காங்க என்று கடுமை காட்டினார்.

இதனை தொடர்ந்து உரிய அனுமதியின்றி பட்டாசு வெடித்தது, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதற்காக போலீசார் பாரதிய ஜனதா கட்சியினரை கைது செய்வதாக தெரிவித்தனர். மேலும்,பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களை வாகனத்தில் ஏறும்படி கூறினர்.

இதற்கிடையில் அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் அனைவரையும் உடனடியாக கைது செய்ய போலீசாரை உத்தரவிட்டார் . மாவட்ட தலைவர் சிவசாமியை போலீசார் வலுக்கட்டாயமாக தள்ளிக் கொண்டு போய் வாகனத்தில் ஏற்ற முயன்றனர். அப்போது போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து எங்களை கைது செய்தால், மாவட்ட முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், மாநிலம் முழுவதும் பிரச்சினையை கிளப்புவோம் என்றும் பாரதிய ஜனதா கட்சியினர் கூறினர். இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்யாமல் விட்டு விட்டனர். பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments