இந்திய விமானப்படைக்கு 499 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏவுகணைகளைத் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் நிறுவனம்

0 2563

இந்திய விமானப்படைக்கு 499 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆகாஷ் ஏவுகணைகளைத் தயாரித்து வழங்கப் பாதுகாப்பு அமைச்சகத்துடன் பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் உடன்பாடு செய்துள்ளது.

பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், வானிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள், வானிலிருந்து தரைஇலக்கைத் தாக்கும் ஏவுகணைகள் ஆகியவற்றைத் தயாரித்து ராணுவம், விமானப்படை ஆகியவற்றுக்கு பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது.

தற்போது பாரத் டைனமிக்ஸ் தயாரிக்க உள்ள ஆகாஷ் ஏவுகணை 720 கிலோ எடை கொண்டதாகும், 60 கிலோ எடையுள்ள வெடிபொருட்களைச் சுமந்துகொண்டு 30 கிலோமீட்டர் தொலைவு வரையுள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் திறன்கொண்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments