இங்கிலாந்து - பாகிஸ்தான்: முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

0 2885

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

கார்டிப்பில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 35 புள்ளி 2 ஓவர்களில் 142 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அதிக அளவாக பாக்கர் சாமின் 47 ரன்கள் எடுத்தார். பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 21 புள்ளி 5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 142 ரன்களைக் குவித்து வெற்றிபெற்றது.

4 விக்கெட்டுகளை வீழ்த்திப் பாகிஸ்தான் அணியைக் குறைந்த ரன்களில் சுருட்டியதற்குக் காரணமான இங்கிலாந்து பந்துவீச்சாளர் சாகிப் மகமூது சிறந்த ஆட்டக்காரர் விருது பெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments