வெள்ளத்தில் சிக்கிய உடல்நலம் பாதிக்கப்பட்ட 85 வயது மூதாட்டி... காடு, மலைகளை தாண்டி மீட்டுக் கொண்டு வந்த மீட்பு குழுவினர்

0 1607

துருக்கியில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட உடல் நலம்பாதிக்கப்பட்ட 85 வயது மூதாட்டியை காடு, மலைகளை தாண்டி மீட்பு குழுவினர் மீட்டுக் கொண்டு வந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

டஸ்ஸி பகுதியைச் சேர்ந்த அடிலா கராட்டஸ் என்ற அந்த மூதாட்டி உடல்நலம் பாதித்ததோடு படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இந்த நிலையில், மூதாட்டி வசிக்கும் பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்தது.

 நடக்க முடியாத மூதாட்டி வீட்டுக்குள்ளேயே சிக்கிக் கொண்டதால், தகவல் அறிந்து சென்ற மீட்பு குழுவினர் மூதாட்டியை பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments