மக்களின் மனதைக் கவர்ந்த உலகின் மிகச் சிறிய பசு

0 3727

உலகின் மிகச் சிறிய பசுமாடு ஒன்று பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

வங்கதேசத்தின் தலைநகர் டாக்கா அருகே உள்ள பண்ணையில் வளர்க்கப்படும் பசு மாடு ஒன்று இந்தப் பெருமையைப் பெற்றுள்ளது. சாரி கிராம் என்ற கிராமத்தில் வளர்க்கப்படும் இந்தப் பசுவுக்கு ராணி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. வெறும் 51 சென்டி மீட்டர் உயரம் கொண்ட அந்தபசு 26 கிலோ எடை கொண்டதாகும்.

இதற்காகவே இந்தப் பசு உலகின் மிகச் சிறிய பசு என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. முன்னதாக கேரளாவைச் சேர்ந்த மாணிக்யம் என்ற பசு 61 சென்டி மீட்டர் உயரத்துடன் தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments