ஆளில்லா கடலடி ஏவுகணைகளை தயாரிக்கிறது சீனா

0 3411

மனித வழிகாட்டுதல் இன்றி தானாக இயங்கி எதிரிகளின் இலக்கைத் தாக்கும் கடலடி ஏவுகணைகளை சீனா உருவாக்கி வருகிறது.

டர்பிடோக்கள் எனப்படும் ஏவுகணைகள் பெரும்பாலும் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் இயக்கப்படுவது வழக்கம். ஆனால் மனித இழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் டர்பிடோக்களை பயன்படுத்த சீனா முடிவு செய்துள்ளது. இந்த டர்பிடோக்கள்  எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களை அடையாளம் காணவும், தேவைப்பட்டால் மறைந்திருந்து தாக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான சோதனை தைவான் நீரிணையில் சுமார் 30 அடி ஆழத்தில் நடந்தது. இந்தச் சோதனை வெற்றி பெற்றதாக சீனா அறிவித்துள்ளது. யுயுவி என அழைக்கப்படும் இந்த டர்பிடோக்கள் தேவைப்படும் நேரத்தில் தனியாகவும், குழுவாகவும் தாக்கும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments