எல்லை ஒப்பந்தங்களை மதிக்காததால்தான் சீனாவுடன் உறவில் விரிசல்: அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

0 2279

எல்லை தொடர்பான ஒப்பந்தங்களை சீனா மதிக்காததால்தான் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா -சீனா இடையிலான வர்த்தகத் தொடர்பு 40 ஆண்டுக்கால பழமை வாய்ந்த சுமுக உறவுடன் இருந்தது  என்று கூறிய அவர் சீனாவுடனான இந்தியாவின் உறவு கடந்த ஓராண்டு காலமாக மிகுந்த சலனங்களை ஏற்படுத்தி வருவதாகக் கூறினார். சீனா எல்லை தொடர்பாக கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை மதிக்காமல் இருப்பதே இதற்கான காரணம் என்றும் அவர் கூறினார்.

45 ஆண்டுகளுக்குப் பிறகு இரு தரப்பிலும் கடும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் வகையில் எல்லையில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றதாக அவர் சுட்டிக் காட்டினார்.இரு தரப்பிலும் அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் ஜெய்சங்கர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments