சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக பலத்த மழை

0 2763

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் விட்டு விட்டு மழை கொட்டித் தீர்த்தது.

பலத்த காற்றுடன் பெய்த மழையால் கிரீம்ஸ் சாலையில் சென்ற ஆட்டோ மற்றும் ஆம்புலன்ஸ் மீது மரம் விழுந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து மரம் அப்புறப்படுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத், சின்னையன் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், செஞ்சி, போடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments