அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்

0 3260

அமெரிக்காவிற்கு மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் நடிகர் ரஜினிக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அவ்வப்போது ரஜினிகாந்த் அமெரிக்காவில் அதே மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில்  கடந்த 19 ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் மத்திய அரசின் அனுமதியோடு ரஜனிகாந்த் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு  மருத்துவ பரிசோதனை முடிந்த பின் சில நாட்கள் ஓய்வெடுத்த அவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது மருத்துவ பரிசோதனை நல்லபடியாக முடிந்தது என தகவல் தெரிவித்த ரஜினி பின் அங்கிருந்து இல்லம் புறப்பட்டு சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments