பழுதாகி நின்ற லாரி... ஸ்டார்ட் ஆக உதவி செய்த காட்டு யானை..!

0 3030

இலங்கையில் வனப்பகுதி சாலையில் பழுதாகி நின்ற லாரியை காட்டு யானை ஒன்று தள்ளி ஸ்டார்ட் ஆக உதவி செய்த வீடியோ வெளியாகி உள்ளது.

ஹபாரனா என்ற இடத்தில் வனப்பகுதியை ஒட்டிச் செல்லும் சாலையில் சென்ற லாரி ஒன்று மின்கலம் சரியாக இல்லாததால் பழுதாகி நின்றது. அப்போது அங்கு வந்த காட்டு யானை ஒன்று லாரியின் அருகில் நின்றது. பின்னர் சில நொடிகள் யோசித்த அந்த யானை லாரியை நெட்டித் தள்ளியது.

ஆனாலும் லாரி புறப்படாததால் மீண்டும் தள்ளியது. இதையடுத்து ஸ்டார்ட் ஆன லாரி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments