"போராட்டத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்"- விவசாயிகளுக்கு மத்திய அமைச்சர் தோமர் கோரிக்கை

0 1552

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ள மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர், மத்திய அரசு பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும் வேறு மாற்று வழிகள் பற்றி விவசாயிகள் பேசலாம் என்றார். வேளாண் உற்பத்தி சந்தை கமிட்டிகள் முறை தொடரும் என்று உறுதியளித்துள்ள அவர். மத்திய அமைச்சரவையின் முடிவின்படி ஒருலட்சம் கோடி ரூபாய் நிதியில் ஒரு பகுதியைக் கொண்டு வேளாண் சந்தைகள் மேம்படுத்தப்படும் என்று கூறினார்.

தேங்காய் விவசாயத்தை வளர்க்கும் வகையில் தேங்காய் வாரியச் சட்டம் திருத்தப்படுவதாக கூறிய மத்திய அமைச்சர் தேங்காய் வாரிய தலைவராக ஒரு அதிகாரியை நியமிப்பதற்குப் பதிலாக ஒரு விவசாயியை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments