நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1969
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நெடுஞ்சாலைத்துறை வெளிப்படைத்தன்மையுடன் இயங்குவதை உறுதி செய்யும் நோக்கில், அத்துறை அதிகாரிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்‍.

நெடுஞ்சாலைத்துறையில் பணிகள் துரிதமாக நடைபெறவும்,காலவிரயத்தை தவிர்த்து, வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் அலுவலக பயன்பாட்டிற்காக 28 கோடி ரூபாய் செலவில் 1213 மடிக்கணினிகள் மற்றும் 1484 கணினிகள் அரசால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் அலுவலகப்பயன்பாட்டிற்கு அதனை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்‍. முதற்கட்டமாக 7 பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அவர் மடிக்கணினிகளை வழங்கினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments