பிரியாணி வாங்கினால் பெட்ரோல் இலவசம் ; பெட்ரோல் சிக்கனத்தை கடைபிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு

0 2466
ஒரு பக்கெட் பிரியாணிக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்

சென்னையில் பெட்ரோலை சிக்கனமாகப் பயன்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரியாணி கடை ஒன்று, பக்கெட் பிரியாணி ஒன்றிற்கு, ஒரு லிட்டர் பெட்ரோலை இலவசமாக வழங்கியது.

மடிப்பாக்கத்தில் உள்ள அந்த கடை மற்றும் அதன் கிளைகளில் 750 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி வாங்கியவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான டோக்கன் வழங்கப்பட்டது.இதனைக் கொண்டு அருகிலுள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில், அத்தியாவாசிய தேவைகளைத் தவிர, அதன் பயன்பாட்டை குறைத்துக்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சலுகை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments