மநீம துணை தலைவராக இருந்த மகேந்திரன் திமுகவில் இணைந்தார்

0 6690

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் மகேந்திரன், தேர்தலுக்கு முன் திமுகவில் இணைந்திருந்தால் கோவையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருப்போம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மகேந்திரன் தனது ஆதரவாளர்கள் 78 பேருடன் திமுகவில் இணைந்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக மகேந்திரன் திமுகவுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியாவும் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

திமுக.,வில் இணைய விரும்புகின்ற 11 ஆயிரத்து 188 உறுப்பினர்களின் பெயர் உள்ளிட்ட முழு விவரங்கள் அடங்கிய தொகுப்பை மு.க.ஸ்டாலினிடம் மகேந்திரன் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments