கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு உரிய முறையில் இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0 2118

கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரண உதவிகளை பெறும் வகையில் உரிய முறையில் இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனாவால் பலியாகியிருந்தால், அந்த காரணத்தை குறிப்பிட்டு இறப்பு சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் தமிழக அரசு உறுதி செய்ய உத்தரவிட்டதோடு விசாரணையை 10 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments