”வருவாய்ப் பற்றாக்குறை நிதி” ரூ.9871 கோடி விடுவிப்பு; தமிழகத்துக்கு ரூ. 183 கோடி..!

0 3176

17 மாநிலங்களுக்கு வருவாய்ப் பற்றாக்குறை நிதி ஒன்பதாயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழகத்துக்கு 183 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

வருவாயை விடச் செலவினம் அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு வருவாய்ப் பற்றாக்குறை நிதியை வழங்குவதற்கு நிதிக் குழு பரிந்துரைக்கும். அவ்வாறு வழங்கப்படும் நிதி, மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவும். 15ஆவது நிதிக் குழு பரிந்துரையின் அடிப்படையில் 17 மாநிலங்களுக்கு மத்திய அரசு வருவாய்ப் பற்றாக்குறை நிதியை மாதந்தோறும் தவணைகளாக விடுவித்து வருகிறது.

இதில் நான்காவது தவணையாகத் தமிழகம் உட்பட 17 மாநிலங்களுக்கு ஒன்பதாயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு 183 கோடியே 67 இலட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

15ஆவது நிதிக் குழு பரிந்துரைத்த ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 452 கோடி ரூபாயில் இதுவரை 39 ஆயிரத்து 484 கோடி ரூபாய் விடுக்கப்பட்டுள்ளது. 12 மாதங்களில் மொத்தத் தொகையும் விடுவிக்கப்படும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments