வாங்கிய கடனை திருப்பி செலுத்த தாயிடம் கடத்தல் நாடகமாடிய மகன்

0 1704

கடனை திருப்பி செலுத்த நண்பர்கள் உதவியுடன் மலேசியாவிலுள்ள தனது தாயிடம் 50லட்சம் ரூபாய் கேட்டு கடத்தல் நாடகமாடிய மகனை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

சென்னை அமைந்தகரையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இம்ரான் என்ற அந்த இளைஞரின் தாய் சுலேகா மலேசியாவில் வசித்து வருகிறார்.

புதன்கிழமை சுலேகாவை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், இம்ரானை கடத்திவிட்டதாகவும், விடுவிக்க 50லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. உடனடியாக சுலேகா, சென்னை போலீசில் ஆன்லைன் மூலம் புகாரளிக்கவே, அமைந்தகரை போலீசார் விசாரணையை துவங்கினர்.

அழைப்பு வந்த செல்போன் எண்ணை வைத்து போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய நிலையில், பயந்து போன இம்ரான், சுலேகாவை தொடர்பு கொண்டு தன்னை கடத்தியதாக கூறியது பொய் எனவும், ஹோட்டல் ஆரம்பிக்க நண்பர்களிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்காக இதுபோன்று நாடகமாடியதாகவும் கூறியுள்ளான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments