8 வாரங்களுக்குள் தலைமை இணக்க அதிகாரி நியமிக்கப்படுவார் டெல்லி உயர்நீதிமன்றத்தில் டுவிட்டர் நிறுவனம் உறுதி

0 1791
8 வாரங்களுக்குள் தலைமை இணக்க அதிகாரி நியமிக்கப்படுவார் டெல்லி உயர்நீதிமன்றத்தில் டுவிட்டர் நிறுவனம் உறுதி

ன்னும் எட்டு வாரங்களுக்குள் தகுதி வாய்ந்த நபரை Chief Compliance Officer எனப்படும் தலைமை இணக்க அதிகாரியாக நியமிக்க உள்ளதாக டுவிட்டர் இந்தியா நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.

அரசின் டிஜிட்டல் விதிகளை அமல்படுத்தாமல் இழுத்தடிக்கும் டுவிட்டர் மீதான வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

முன்பு நடந்த விசாரணையில், அரசின் விதிகளை ஏற்கா விட்டால், அதன் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

இன்று நடந்த விசாரணையில், அதிகாரி நியமனம் குறித்த உறுதியை அளித்துள்ள டுவிட்டர் தரப்பு, அரசின் டிஜிட்டல் விதிகளை நடைமுறைப்படுத்துவதற்காக,கடந்த 6 ஆம் தேதி முதல்  இந்தியர் ஒருவரை, தற்காலிக தலைமை இணக்க அதிகாரியாக நியமித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments