”பத்த வச்சுட்டியே பரட்டை” திருமணம் ஆகாத வாலிபர்கள்..! ஊருக்குள் ஒட்டிய போஸ்டர் வைரல்

0 6557
”பத்த வச்சுட்டியே பரட்டை” திருமணம் ஆகாத வாலிபர்கள்..! ஊருக்குள் ஒட்டிய போஸ்டர் வைரல்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே, "வருகின்ற திருமண சம்பந்தங்களை முடக்குகின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும், திருமணம் ஆகாத வாலிபர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்" என ஒட்டப்பட்ட போஸ்டர் வில்லங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

டீக்கடை, குட்டிச்சுவர்களில் அமர்ந்து திருமண வரன்களை கெடுத்து விடும் யோக்கிய சிகாமணிகள் எல்லா ஊரிலும் உண்டு. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே, அண்மைக் காலமாக இளைஞர்களுக்கு பெண் பார்ப்பதும், பெண் வீட்டார் விசாரிக்க வரும்போது சில ஆசாமிகள் புறம் பேசி வரன்களை தடுப்பதும் தொடர்கதை ஆகி வருவதாக புகார் கூறப்படுகிறது.

இளைஞர்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தும் வகையில், வரன்களை தடுக்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி, இப்படிக்கு திருமணம் ஆகாத வாலிபர் சங்கம் என்று மொட்டையாக பேனர் வைப்பதும் போஸ்டர் ஒட்டுவதுமாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், ஆயினி விளை, பிச்சன் விளை பகுதி இளைஞர்கள் சிலர், ஒருபடி மேலேபோய் அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வரும் நபர் ஒருவரின் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்துள்ளனர்.

வழக்கமான வாசகங்களுடன், திருமணம் விலக்குவோர் சங்க தலைவர் என்றும், தொழில் - திருமண வரன் தடுத்தல், உப தொழில் - பலசரக்கு வியாபாரம் என்றும் சுய விபரக் குறிப்போடு போஸ்டரை அடித்து, அயினி விளை, பிச்சன்விளை பகுதி மட்டுமில்லாமல் குளச்சல், கருங்கல் பகுதிகளிலும் ஒட்டியுள்ளனர்.

இதேபோல மேலும் சிலரை அம்பலப்படுத்தப் போவதாகவும் அந்த போஸ்டரில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், காவல்நிலையத்தில் புகார் அளித்து, மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக சம்பந்தப்பட்ட முதியவரும், அவரது குடும்பத்தினரும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments