பாரீசில் உள்ள இந்திய அரசின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய கெயிர்ன் நிறுவனத்துக்கு பிரெஞ்சு நீதிமன்றம் அனுமதி என தகவல்

0 1921
பாரீசில் உள்ள இந்திய அரசின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய கெயிர்ன் நிறுவனத்துக்கு பிரெஞ்சு நீதிமன்றம் அனுமதி என தகவல்

பாரீசில் உள்ள இந்திய அரசின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய கெயிர்ன் நிறுவனத்துக்கு பிரெஞ்சு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கெயிர்ன் நிறுவனம் அதன் பங்குகளைக் கைம்மாற்றியதில் மூலதன ஆதாய வரியாக 24 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கட்ட வேண்டும் என வருமான வரித்துறை தெரிவித்தது.

இந்த வழக்கில் நெதர்லாந்தின் ஹேக்கில் உள்ள பன்னாட்டுத் தீர்ப்பாயம் கெயிர்ன் நிறுவனம் வரி செலுத்த வேண்டியதில்லை என்றும், இழப்பீடு, வழக்குச் செலவு, வட்டி என இந்திய அரசு எட்டாயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

இந்தத் தொகையைப் பெறுவதற்காக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளின் நீதிமன்றங்களிலும் கெயிர்ன் நிறுவனம் வழக்குத் தொடுத்து தற்போது பிரான்சில் இந்திய அரசின் சொத்துகளை பறிமுதல் செய்ய அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments