சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைக்கப்பட்ட பின்னரும் உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல் - டீசல் விலை

0 7501
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைக்கப்பட்ட பின்னரும் உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல் - டீசல் விலை

சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்த பின்னரும் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

கச்சா எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஓபெக்-ன் கூட்டத்தில், கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, அது குறித்த முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில், கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. திங்கள் கிழமை பேரலுக்கு 77 புள்ளி 16 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை நேற்று 72 புள்ளி 93 டாலர் ஆக குறைந்தது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறே பெட்ரோல்-டீசல் விலைகள் நிர்ணயிக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறும் நிலையில், உள்நாட்டு பெட்ரோலிய விலை குறைக்கப்படவில்லை. அதே சமயம் பெட்ரோல் விலையில் 35 காசுகளும், டீசல் விலையில் 9 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments