அமைச்சரை படகில் இருந்து இடுப்பில் தூக்கிச் சென்று கரை சேர்த்த மீனவர்..!

0 3048
அமைச்சரை படகில் இருந்து இடுப்பில் தூக்கிச் சென்று கரை சேர்த்த மீனவர்..!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் ஆய்வுப் பணிக்கு வந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், படகிலிருந்து இறங்கி தண்ணீரில் கால் வைக்க தயங்கியதால், மீனவர் ஒருவர் குண்டுக்கட்டாக இடுப்பில் தூக்கிச் சென்று கரை சேர்த்தார்.

முகத்துவாரம் பகுதியில் மணல் அரிப்பு ஏற்பட்டு நுழைவுவாயில் அடைபட்டு கிடக்கும் நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் விசைப் படகில் சென்று முகத்துவாரத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சரின் படகில் அதிக நபர்கள் ஏறியதால் தொடர்ந்து செல்ல முடியாமல் தடுமாறியது.

இதனை அடுத்து அமைச்சர் படகில் இருந்த சிலர் வேறு படகுக்கு மாற்றப்பட்டனர்.

ஆய்வை முடித்துக் கொண்டு திரும்பிய அமைச்சர், படகிலிருந்து இறங்கி உப்பங்கழி நீரில் கால் வைக்க தயங்கியதால், மீனவர் ஒருவர் இடுப்பில் தூக்கிச் சென்றார்.

அப்போது, முகத்துவாரம் பகுதியை விரைவில் சீரமைத்து தரக்கோரி அமைச்சரிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments