கைக்குழந்தையுடன் ஒடிசாவிலிருந்து வழிதவறி வந்த கர்ப்பிணிப் பெண்... 3 ஆண்டுகளாகப் பராமரித்து, கணவனை கண்டுபிடித்து ஒப்படைப்படைத்த சமூகநலத்துறை அதிகாரிகள்

0 2533

ஒடிசாவிலிருந்து கைக்குழந்தையுடன் வழிதவறி தூத்துக்குடி மாவட்டம் வந்த கர்ப்பிணிப் பெண்ணை 3 ஆண்டுகளாகப் பராமரித்து, அவரது குடும்பத்தையும் தேடிக் கண்டுபிடித்து ஒப்படைத்துள்ளனர் மாவட்ட சமூகநலத்துறையினர்.

பிளாச்சி பொய் என்ற அந்தப் பெண், 3 ஆண்டுகளுக்கு முன் நிறைமாத கர்ப்பிணியாக ஒன்றரை வயது குழந்தையுடன் திருச்செந்தூர் கோவில் அருகே சுற்றித் திரிந்துள்ளார். அவரை மீட்டு பிரசவம் பார்த்து, பராமரித்து வந்த சமூகநலத்துறை அதிகாரிகள், ஒடிசா போலீசார் மூலம் பிளாச்சி பொய்யின் கணவர் குஷா பொய்யைக் கண்டுபிடித்தனர்.

ஒடிசா போலீசாருடன் தூத்துக்குடி வந்த குஷா பொய்யுடன், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், கேக் வெட்டி, புத்தாடைகள் வழங்கி பிளாச்சி பொய் மீண்டும் ஒடிசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments