பாராகிளைடிங் விளையாட்டின் போது கயிறு அறுந்து விபத்து : காப்பாற்ற வந்த படகின் மீது மோதி இளைஞர் படுகாயம்

0 2109
பாராகிளைடிங் விளையாட்டின் போது கயிறு அறுந்து விபத்து : காப்பாற்ற வந்த படகின் மீது மோதி இளைஞர் படுகாயம்

எகிப்தில் பாராசூட்டில் சென்ற இளைஞர் கயிறு அறுந்ததால் அவரைக் காப்பாற்றச் சென்ற படகில் அதிவேகத்தில் மோதினார்.

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் ஷார்ம் எல் ஷேக் என்ற கடல் பகுதியில் பாராகிளைடிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் பறக்க முயன்ற பாராசூட்டின் கயிறு அறுந்ததால் அவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதனைக் கண்ட மீட்புப் படையினர் விரைவுப் படகில் சென்று அவரை மீட்க முயன்றனர். அப்போது காற்று மாறுதிசையில் வீசியதால் படகை நோக்கி வந்த அந்த சுற்றுலாப் பயணி நேராக படகின் மீது அதிவேகத்தில் மோதினார்.

தலையில் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட அந்த நபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments