யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது இங்கிலாந்து அணி

0 3933

யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.

லண்டன் வெம்பிளே மைதானத்தில் நடந்த அரைஇறுதி ஆட்டத்தின் முதல் பாதியின் 30-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் Mikkel Damsgaard கோல் அடித்தார். தொடர்ந்து 39-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் Simon Kjær சுய கோல் உதவியுடன் இங்கிலாந்து அணி ஆட்டத்தை சமன் செய்தது.

2-ஆம் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காத நிலையில் கூடுதல் நேரத்தில் இங்கிலாந்து வீரர் Harry Kane கோல் திருப்பி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இறுதியில் இங்கிலாந்து அணி 2-க்கு 1 என்ற கோல் வித்தியாசத்தில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments