காஷ்மீரில் பதுங்கியிருந்த 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

0 2289

காஷ்மீரின் வெவ்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குல்காம் மாவட்டத்தின் ஸோடர் என்ற இடத்தில் ஜம்மு காஷ்மீர் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதேபோல்  காஷ்மீர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் சோதனையின் போது, அவர்கள் மீது தாக்குதல் நடத்திய மற்றொரு தீவிரவாதியும் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே புல்வாமாவின் புசால் என்ற இடத்தில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படும் மற்றொரு தீவிரவாதியைத் தேடும் பணியின் போது அவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். நேற்று மாலை ஒரு தீவிரவாதி கொல்லப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments