விம்பிள்டன் காலிறுதியில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் தோல்வி, ஜோகோவிச் அரைஇறுதிக்கு தகுதி

0 2804

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் கால்இறுதியில், சுவிஸ் வீரர் பெடரர் தோல்வியை தழுவினார்.

லண்டனில் நடந்த ஆட்டத்தில் 3-க்கு 6, 6-க்கு 7, 0-க்கு 6 என்ற நேர்செட் கணக்கில் போலந்து இளம் வீரர் Hubert Hurkacz-விடம் அவர் தோல்வியடைந்தார்.

மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் ஜோகோவிச் 6-க்கு 3, 6-க்கு 4, 6-க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் ஹங்கேரி வீரர் Márton Fucsovicsஐ வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.

மகளிர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்டி 6-க்கு 1, 6-க்கு 3 என்ற நேர்செட் கணக்கில் சக நாட்டை சேர்ந்த Ajla Tomljanović வென்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு கால்இறுதியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா வென்று அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments