ஈரான் நாட்டின் புதிய அதிபருடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

0 1517

ஈரான் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இப்ராஹிம் ரைசியைச் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவித் ஸரீப்பைச் சந்தித்த ஜெரீஃப்பைச் சந்தித்த ஜெய்சங்கர், உலகளாவிய பிரச்னைகள் குறித்து பேசியதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் வளைகுடா பிராந்தியத்தின் நிலைமை மற்றும் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் சபாஹர் துறைமுகத் திட்டத்தை புதுப்பிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து ஈரான் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள இப்ராஹிம் ரைசிக்கு, பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்த்தைத் தெரிவித்த ஜெய்சங்கர், ரைசியுடனும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments