மத்தியில் பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

0 3202

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

மீனாக்சி லேகி, அனுப்ரியா படேல், ஷோபா கரந்தலஜே உள்ளிட்ட 7 பெண்கள் புதிதாக அமைச்சர் பதவியேற்றுள்ளனர். ஏற்கெனவே அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, சாத்வி நிரஞ்சன் ஜோதி, ரேணுகா சிங் ஆகியோருடன் சேர்த்து பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது.

அமைச்சராகப் பதவியேற்ற 43 பேரில் 7 பேர் உத்தரபிரதேசத்தையும், 27 பேர் ஓபிசி பிரிவையும், 12 பேர் பட்டியலின பிரிவையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments