வேலூரில் சாலையை கடக்க ஓடிய போது லாரி மோதி, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சிறுவன்..!

0 2970

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மினி டிப்பர் லாரி மோதி, சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அதிசய காட்சி சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

பிச்சனூர் பேட்டை பகுதியில் பலமனேரி நெடுஞ்சாலையில் காலை 1 ம் வகுப்பு படிக்கும் 6 வயது பள்ளி மாணவன், தனது சகோதரியுடன் சாலையில் நின்று கொண்டிருந்தான்.

சாலையின் ஒரு புறம் வாகனம் வருகிறதா என்று பார்த்த சிறுவன், மற்றொரு புறம் பார்க்காமல் வேகமாக சாலையைக் கடப்பதற்கு ஓடினான். அப்போது ஜல்லி ஏற்றி வந்த மினி டிப்பர் லாரி சிறுவன் மீது மோதியது.

அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்த பதட்டத்துடன் ஓடி வந்த போது, சிறு காயங்களுடன் லாரிக்கு அடியிலிருந்து சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து எழுந்து ஓடி வந்தான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments