பாலியல் தொந்தரவு கொடுத்தததுடன் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது

0 1477

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பெண் தற்கொலை வழக்கில் சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்‍.

பெரியநாயகிபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் வெளிநாட்டில் உள்ள நிலையில், அவரது மனைவி தமிழழகி கடந்த 3ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்‍. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறிய உறவினர்கள், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்‍.

இந்நிலையில் தமிழழகி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் ஆவணத்தைச் சேர்ந்த விக்னேஷ், மணிகண்டன் மற்றும் சிறுவனை போலீசார் கைது செய்தனர். தமிழழகிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தததுடன்,அந்த பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments