பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் மறைவு ; அரசியல் தலைவர்கள் இரங்கல்

0 2469
பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் மறைவு ; அரசியல் தலைவர்கள் இரங்கல்

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், நடிகர் திலீப் குமாரின் மறைவு கலைத்துறைக்கு பேரிழப்பு என்றும், அவர் திரைத்துறை ஜாம்பவானாக என்றும் நினைவுகூரப்படுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது டுவிட்டர் பதிவில், “இந்திய சினிமாவில் திலீப் குமாரின் பங்களிப்பு அடுத்த தலைமுறைகளின் நினைவில் எப்போதும் இருக்கும் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் திலீப்குமார் 98 வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments