ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை தொடர்ந்து இயங்க ரூ.1.25 கோடி நிதி -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

0 2063

ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை தொடர்ந்து, தொய்வின்றி இயங்கத் தமிழக அரசின் சார்பில் ஒரு கோடியே 25 இலட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைக்கு உருவான நிதிப்பற்றாக்குறையால், அங்குப் பணிபுரிந்த தமிழ்ப் பேராசிரியர் உல்ரிக்க நிக்லாஸ் 2020 செப்டம்பரில் ஓய்வு பெற்றபின் தமிழ்ப் பிரிவை மூடுவதாக அறிவித்தது.

தமிழ்த் துறை தொடர்ந்து இயங்கத் தேவையான நிதியில் பாதியைத் திரட்டி அமெரிக்க வாழ் இந்தியர்கள் கொலோன் பல்கலைக்கழகத்திற்கு அளித்ததால், தமிழ்ப் பிரிவை மூடும் முடிவு 2022 ஜூன் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைக்குத் தேவையான நிதியில் ஒரு கோடியே 25 இலட்சம் ரூபாயைத் தமிழக அரசு வழங்குவதாக அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தொகை விடுவிக்கப்படாததை அறிந்த முதலமைச்சர் உடனடியாக வழங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments