இந்தியன் - 2 பட விவகாரம் ; இயக்குனர் சங்கருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

0 2394
சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் - 2 பட விவகாரம்

திரைப்பட இயக்குநர் சங்கருக்கு எதிராக லைக்கா நிறுவனம் தாக்கல் செய்திருந்த மற்றொரு வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் இந்தியன் - 2 படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்க சங்கருக்கு தடை விதிக்கக்கோரி தொடர்ந்த வழக்கில் தடை விதிக்க, தனி நீதிபதி மறுத்திருந்தார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, லைக்கா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது . வாதங்களை கேட்ட நீதிபதிகள், லைக்காவின் மற்றொரு வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments