ஹைதி அதிபர் ஜோவ்நெல் மோய்ஸ் சுட்டுக்கொலை..! வெளிநாட்டினரின் கைவரிசை என பிரதமர் குற்றச்சாட்டு

0 2418

ஹைதி அதிபர் ஜோவ்நெல் மோய்ஸ் (Jovenel Moise ) வெளிநாட்டைச் சேர்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆதிகாலை அவரது இல்லத்துக்குள் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சரமாரியக்ச் சுட்டுக் கொன்றனர். தொடர் நிலநடுக்கங்கள் மற்றும் கொரோனா பெருந்தொற்றால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அதிபர் ஜோவ்நெல் (Jovenel ) மீது கடும் அதிருப்தி நிலவியது.

இந்நிலையில் தற்போது அவர் சுட்டு கொல்லப்பட்டதால் நாட்டை நிர்வாகிக்கும் பொறுப்பை பிரதமர் க்ளாட் ஜோசப் (Claude Joseph) ஏற்றுக்கொண்டார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அதிபரின் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments