சினிமாவில் நடிகையாக்குவதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை ; இயக்குனர் கைது

0 4087
காவல்துறை தம்பதியின் 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை

சென்னையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, சினிமாவில் நடிகை ஆக்குவதாக ஆசை வார்த்தை கூறி காவல்துறை தம்பதிகளின் 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டிய இயக்குநர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காவல்துறையில் பணியாற்றும் தம்பதியின் 17 வயது சிறுமி ஆன்லைன் வகுப்பிற்கு வாங்கிய செல்போனில் பயன்படுத்திய இன்ஸ்டாகிராமில் சினிமா இயக்குநர் என அறிமுகமான மதுரவாயலைச் சேர்ந்த சத்ய பிரகாஷ், சிறுமியை நடிகையாக்குவதாக ஆசை வார்த்தை கூறியதோடு, வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து வடபழனி போலீசார் நடத்திய விசாரணையில், சமுதாயம் என்ற திரைப்படத்தை இயக்கி வரும் சத்ய பிரகாசுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஏழு வயதில் குழந்தை இருப்பதும், மனைவியை பிரிந்ததால் திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமியை மிரட்டியதும் தெரியவந்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments