”அனைத்து நாடுகளின் கூட்டு முயற்சியால் தான் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க முடியும்” -ஐ.நா அவையில் இந்தியப் பிரதிநிதி பேச்சு

0 1858

லகளாவிய பயங்கரவாதத்தை ஐ.நா. உறுப்பு நாடுகளின் கூட்டு முயற்சிகளால் மட்டுமே தோற்கடிக்க முடியும் என ஐ.நாவுக்கான இந்தியத் தூதர் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச்சபையில் பயங்கரவாதத்துக்கு எதிரான தீர்மானத்தின் மீது திருமூர்த்தி பேசினார். அப்போது அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்குப் பின் எந்த விதிவிலக்கும் இன்றி அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து கூட்டு முயற்சியால் பயங்கரவாதத்தை முறியடிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

வன்முறைத் தீவிரவாதம், வன்முறைத் தேசியம், வலதுசாரிப் பயங்கரவாதம் என்னும் பெயர்களில் பயங்கரவாதத்தைப் பிரித்துப் பார்க்கும் நிலை உள்ளதாகவும் குறிப்பிட்டார். உங்கள் பயங்கரவாதிகள், எங்கள் பயங்கரவாதிகள் என ஒவ்வொரு நாடும் பிறர் மீது குறைகூறிக் கொண்டிருந்த காலம் மீண்டும் வந்துவிடக் கூடாது எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments