கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 50,000 நிதியுதவி ; டெல்லி அரசு

0 1886
கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 50,000 நிதியுதவி

கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2500 ரூபாயும் வழங்கும் திட்டத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்துள்ளார்.

இந்தத் திட்டத்தின்படி கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குக் கருணைத் தொகையாக ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும்.

குடும்பத்தில் வருமானம் ஈட்டிவந்த பெற்றோரில் ஒருவரை இழந்திருந்தால் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு 25 வயது நிறைவடையும் வரை மாதந்தோறும் 2500 ரூபாய் வழங்கப்படும். இதற்காக அரசின் இணையத்தளத்திலேயே விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments