சக்கை போடு போடும் சீன கிராமத்து விவசாயிகள்..! இணையம் மற்றும் டிக்டாக் செயலி வாயிலாக கோடி கோடியாக விற்பனை

0 11441

சீனாவில் ஒரு காலத்தில் வறுமையில் வாடிய விவசாயிகள் டிக்டாக் போன்ற செயலிகளில் தங்களது விளைபொருட்களை வித்தியாசமாக புரமோட் செய்து லட்சக்கணக்கில் லாபம் பார்த்து வருகின்றனர்.

Brother Pomegranate என்ற பெயரில் இன்டர்நெட்டில் தூள் கிளப்பும் யுன்னான் மாகாண விவசாயி ஜின் கவோயி என்பவர் 2020 ல் 335 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக கூறுகிறார்.

அவருக்கு 73 லட்சம் பாலோயர்ஸ் உள்ளனர். இவரைப் போன்ற பலர், உள்ளடங்கிய கிராமங்களில் இருந்தவாறே பழங்கள் உள்ளிட்ட தங்களது வேளாண் விளைபொருட்களை நகர மக்களிடம் இணையம் மற்றும் செயலி வாயிலாக விற்று லாபம் ஈட்டுகின்றனர்.

மேலும் கொரோனாவால் நகரங்களில் வாழ்க்கையை தொலைத்த பலர் கிராமங்களுக்கு திரும்பி, இணைம் மற்றும் செயலியின் உதவியால் வெற்றிகரமான வர்த்தகர்களாக மாறி உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments